2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

பழைய மாணவர்களுக்கான இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் இந்து கல்லூரி வெற்றி

Super User   / 2010 மே 07 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் இந்துக் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களுக்கு இடையில் முதல்முறையாக இடம்பெற்ற இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் அணி வெற்றிபெற்றுள்ளது.

இவர்களுக்கான பரிசில்கள் வடமாகாண விளையாட்டுத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சி.அண்ணாத்துரை, கொக்குவில் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் பொ.கமலநாதன், மேலதிக அதிபர் க.தேவராசா ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.

இந்துக்களின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் இந்துக் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து இந்த இருபதுக்கு - 20 போட்டிகள் இடம்பெற்றன.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--