2021 மே 10, திங்கட்கிழமை

பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 18 , மு.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித்தொடரின் ஷார்ஜாவில் இடம்பெற்ற மூன்றாவது போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 49.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் ஹபீஸ் 45 ஓட்டங்களையும் அஸார் அலி 36 ஓட்டங்களையும் வகாப் ரியாஸ் ஆட்டமிழக்காமல் 3, ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக,  கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும் மொயின் அலி, ரீஸ் டொப்லி, டேவிட் வில்லி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

209 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 41 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் டெய்லர் 67 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 49 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றதோடு அணித்தலைவர் ஒயின் மோர்கன் 35 ஓட்டங்களையும் அலெக்ஸ் ஹேல்ஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், பாகிஸ்தான் அணி சார்பாக அறிமுகத்தை மேற்கொண்ட ஸபார் கோகர் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் இர்பான், ஷோய்ப் மலிக், தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டியின் நாயகனாக ஜேம்ஸ் டெய்லர் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X