2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

போட்டி நிர்ணயம் தொடர்பில் விசாரிக்கப்படுவது ஹொங் கொங்கா?

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 08 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

போட்டி நிர்ணயத்தில் ஈடுபட முனைந்தமைக்காக, சர்வதேச அணியொன்று விசாரணைக்கு உள்ளாக்கப்படுவதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவ்வணி ஹொங் கொங் அணியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழலுக்கெதிரான அமைப்பின் தலைவர் றொனி பிளனகன், போட்டிகளை நிர்ணயம் செய்ய முனைந்த குற்றச்சாட்டுத் தொடர்பில், அணியொன்று விசாரணை செய்யப்படுவதாகத் தெரிவித்ததோடு, அவ்வணியைப் பெயரிட மறுத்திருந்தார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி, விசாரணைக்கு உட்படுத்தப்படும் அணியின் பெயரைக் குறிப்பிடாத போதிலும், அண்மையில் இடைக்காலத் தடைக்கு உட்படுத்தப்பட்ட வீரரின் அணி பற்றியே விசாரணைகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.

ஹொங் கொங்கைச் சேர்ந்த இர்பான் அஹ்மட்டே, இவ்வாண்டு ஜனவரியில், போட்டி நிர்ணயம் தொடர்பாக முறையிடவில்லை என்பதற்காகவே, அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், இவ்விடயத்தில், சர்வதேச கிரிக்கெட் சபையிடம் விளக்கம் கோரியுள்ளதாக, ஹொங் கொங் அணி தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .