2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிம்பாப்வே வெற்றி

Super User   / 2010 மே 28 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் போட்டியில் இந்திய அணியைத் தோற்கடித்து சிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

சிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 285 ஓட்டங்களை எடுத்தது.

அதிகபட்சமாக ரோகித் சர்மா 119 பந்துகளில்  114 ஓட்டங்களையும் ரவீந்திர ஜடேஜா 61 பந்துகளில் 61 ஓட்டங்களையும் அணியின் தலைவர் ரெய்னா 53 பந்துகளில் 37 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய சிம்பாப்வே அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்களை  எடுத்தது. இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--