Shanmugan Murugavel / 2016 மார்ச் 27 , மு.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷின் சுதந்திர தினமான கடந்த சனிக்கிழமை (26), நியூசிலாந்துக்கெதிராக அவ்வணி 75 ஓட்டங்களால் தோல்வியடைந்ததமையானது, சில தருணங்களில் மிகச்சிறப்பாகவும் ஆனால் முழுமையான பெறுபேறுகளை ஒருபோதும் வந்திராத அவ்வணியின் உலக இருபதுக்கு-20 தொடரை எடுத்தியம்புவதாக அவ்வணியின் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் கடந்த சனிக்கிழமை (26) இடம்பெற்ற போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 145 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 70 ஓட்டங்களை மட்டுமே 75 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.
இந்நிலையிலேயே, கருத்து தெரிவித்த ஹத்துருசிங்க, மேற்படி போட்டியின் ஆரம்பத்தில், தாங்கள், மந்த நிலையில் இருந்ததாகவும் தமது களத்தடுப்பானது ஆர்வமற்று இருந்ததாகவும், பின்னர், தமது பந்துவீச்ச்சாளர்கள் சிறப்பாகச் செயற்பட்டதாகவும் அதன் பின்னர், துடுப்பாட்டத்தை மோசமாக முடித்துக் கொண்டதாக தெரிவித்த அவர், என்னைப் பொறுத்த வரையில் இது எமது முழு உலக இருபதுக்கு-20 தொடரை எடுத்துக்காட்டுவதாக தெரிவித்தார்.
2 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
14 minute ago