Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 06 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரான சப்பல் - ஹட்லி தொடரின் 2ஆவது போட்டியிலும், அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.
கன்பெராவில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 378 ஓட்டங்களைக் குவித்தது. டேவிட் வோணர், 115 பந்துகளில் 119 ஓட்டங்களைக் குவித்தார். இது ஒ.நா.ச.போட்டிகளில் அவரது 10ஆவது சதமாகும். தவிர மிற்சல் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 76 (40), அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 72 (76), ட்ரவிஸ் ஹெட் 57 (32) ஆகியோரும் தங்களது பங்களிப்புகளை வழங்கினர். பந்துவீச்சில் டிம் சௌதி, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
379 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, ஆரம்பத்திலிருந்தே தடுமாற்றத்தை வெளிப்படுத்தி, 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 262 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 116 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் கேன் வில்லியம்ன் 81 (80), ஜேம்ஸ் நீஷம் 74 (83), மார்ட்டின் கப்டில் 45 (40) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் பற் கமின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜொஷ் ஹேஸல்வூட், மிற்சல் ஸ்டார்க், ஜேம்ஸ் ஃபோக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக, டேவிட் வோணர் தெரிவானார்.
இத்தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இன்னமும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், இந்தத் தொடரை அவ்வணி கைப்பற்றியுள்ளது.
25 minute ago
33 minute ago
37 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
37 minute ago
38 minute ago