2021 மே 06, வியாழக்கிழமை

முன்னதாக ஆரம்பிக்கும் போர்மியுலா வன் 2016 பருவகாலம்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்கனவே திட்டமிடப்பட்டது போன்று இல்லாமல், அடுத்த 2016ஆம் ஆண்டு பருவகாலம் இரண்டு வாரங்கள் முன்பதாக அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

மெல்போர்ன் ஓட்டப்பந்தயம் முன்னர் எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி ஆரம்பிப்பதாய் இருந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், எதிர்வரும் வருடமே முன்னதாய் ஆரம்பிக்கவுள்ளது.

எனினும் ஒரு வருட காலத்தில் சாதனை ரீதியாக 21 பந்தயங்களை நடாத்தும் பொருட்டு, நெருக்கடியான அட்டவணையைத் தயாரித்ததாக அணிகள் முறைப்பாடு செய்ததையடுத்தே, பருவகாலத்தின் ஆரம்பம் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து பஹ்ரெயின், சீனா, ரஷ்யாவில் இரு வார இடைவெளிகளில் பந்தயங்கள் இடம்பெறவுள்ளதோடு, பிரித்தானிய கிரான்ட்பிறிக்ஸ் ஜூலை பத்தாம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட அட்டவணை என்று போர்மியுலா வன் ஆளும் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதால், பிந்தைய காலங்களில் அட்டவணையின் திகதிகளில் மேலும் மாற்றம் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .