2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

மியாமி தொடர்: அரையிறுதியில் ஜோக்கோவிச், கேபர், அஸரெங்கா

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 31 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு உலகின் முதல் நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான அங்கெலிக் கேபர், உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான பெலாரஸ்ஸின் விக்டோரியா அஸரெங்கா ஆகியோர் தகுதி பெற்றனர்.

நொவக் ஜோக்கோவிச் தனது காலிறுதிப் போட்டியில், 6-3, 6-3 என்ற செட் கணக்கில் உலகின் ஏழாம் நிலை வீரரான செக் குடியரசின் தோமஸ் பேர்டிச்சை தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். நொவக் ஜோக்கோவிச், தனது அரையிறுதிப் போட்டியில், உலகின் 15ஆம் நிலை வீரரான டேவிட் கொபினை எதிர்கொள்கிறார். டேவிட் கொபின், தனது காலிறுதிப் போட்டியில், 3-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் உலகின் 19ஆம் நிலை வீரரான பிரான்ஸின் ஜீல்ஸ் சிமோனை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.

இதேவேளை, அங்கெலிக் கேபர் தனது காலிறுதிப் போட்டியில், 6-3, 6-2 என்ற செட் கணக்கில் உலகின் 24ஆம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் மடிஸன் கீஸைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். அங்கெலிக் கேபர், தனது அரையிறுதிப் போட்டியில் விக்டோரியா அஸரெங்காவை எதிர்கொள்ளவுள்ளார். விக்டோரியா அஸரெங்கா தனது காலிறுதிப் போட்டியில், 6-4, 6-2 என்ற செட் கணக்கில் உலகின் 23ஆம் நிலை வீராங்கனையான பிரித்தானியாவின் ஜொகன்னா கொன்டாவைத் தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .