2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் நரைன், பொலார்ட் இடம்பிடிப்பு

Shanmugan Murugavel   / 2016 மே 19 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், சகலதுறை வீரர் கெரான் பொலார்ட் இருவரும், அவ்வணியின் ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு நவம்பருக்குப் பின்னர், சர்வதேசப் போட்டிகள் எவற்றிலும் விளையாடியிருக்காத இவர்களிருவரும், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய மூன்று அணிகளும் பங்குபற்றும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்காகவே சேர்க்கப்பட்டுள்ளனர். கரீபியன் தீவுகளில் இடம்பெறவுள்ள இத்தொடர், ஜூன் 3ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாமில், அண்மையில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சம்பியனாக முக்கிய காரணமாக அமைந்த கார்லொஸ் பிறெத்வெய்ட், மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோரும் இக்குழாமில் இடம்பெற்றுள்ள போதிலும், டெரன் சமி, டுவைன் பிராவோ, கிறிஸ் கெயில், அன்றே ரஸல் ஆகியோருக்கு இக்குழாமில் இடம் கிடைத்திருக்கவில்லை.

அறிவிக்கப்பட்டுள்ள குழாம்: ஜேஸன் ஹோல்டர், சுலைமான் பென், கார்லொஸ் பிறெத்வெய்ட், டெரன் பிராவோ, ஜொனதன் கார்ட்டர், ஜோன்சன் சார்ள்ஸ், அன்ட்ரே பிளெற்சர், ஷனொன் கப்றியல், சுனில் நரைன், ஆஷ்லி நேர்ஸ், கெரான் பொலார்ட், டினேஷ் ராம்டின், மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .