2021 மே 08, சனிக்கிழமை

யுனைட்டெட்டுக்கு ரொனால்டோ தேவை: வான் கால்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 23 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்த்துக்கல் தேசிய அணியினதும், ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகமான ரியல் மட்ரிட்டினதும் நட்சத்திர முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை மீண்டும் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு கொண்டு வர விரும்புவதை மன்செஸ்டர் யுனைட்டெட் கால்பந்தாட்டக் கழகத்தின் பயிற்சியாளர் லூயிஸ் வான் கால் உறுதிப்படுத்தினார்.

உலக சாதனை ஊதியத் தொகையாக, 80 மில்லியன் யூரோக்களுக்கு 2009ஆம் ஆண்டு மன்செஸ்டர் யுனைட்டெட் அணியிலிருந்து ரியல் மட்ரிட் அணிக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ சென்றிருந்தார்.

இருந்தபோதும் 30 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மட்ரிட்டை விட்டு வெளியேறப் போவதாக ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

நாங்கள் அனைத்து வீரர்களையும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், தனித்து ரொனால்டோவை மட்டுமல்ல எனத் தெரிவித்த வான் கால், எனினும் இந்த வீரர்களை அதிகமான சந்தர்ப்பங்களில் பெறமுடியாது என்றும், ரொனால்டோவைப் பொறுத்த வரை, காத்திருப்பதாகவும், நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மூன்று முறை பீபாவின் உலகின் சிறந்த வீரர் விருதைப் பெற்ற ரொனால்டோ, தற்போது ரியல் மட்ரிட் சார்பாக அதிக கோல்களைக் கொண்டு விளங்குகின்றார். ரியல் மட்ரிட் சார்பில், ஒரு லா லிகா பட்டத்தையும், ஒரு சம்பியன்ஸ் கிண்ணத்தையும் இரண்டு ஸ்பானிஷ் கிண்ணத்தையும் கடந்த ஆறு வருடங்களில் வென்றுள்ளார்.

இதேவேளை, 2003ஆம் ஆண்டு 12.24மில்லியன் யூரோக்களுக்கு மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு வந்த ரொனால்டோ, அங்கு 292 போட்டிகளில் 118 கோல்களைப் பெற்று, மூன்று பிறிமியர் லீக் பட்டத்தையும், ஒரு சம்பியன்ஸ் கிண்ணத்தையும், ஒரு எஃப்.ஏ கிண்ணத்தையும், இரண்டு லீக் கிண்ணங்களையும் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X