2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

யுனைட்டெட்டின் முகாமையாளராக இவ்வாரம் நியமிக்கப்படுகிறார் மொரின்ஹோ

Shanmugan Murugavel   / 2016 மே 22 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளராக, செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோ நியமிக்கப்படவுள்ளதாக, பி.பி.சி செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இவ்வாரத்தில் அவர் நியமிக்கப்படுவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற எப்.ஏ கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்பதாகவே, மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்துக்கும் மொரின்ஹோவுக்குமிடையிலான இணக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லூயிஸ் வான் காலின் முகாமைத்துவத்தின் கீழ், சம்பியன்ஸ் லீக் தொடருக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் அணி தகுதிபெறாமை காரணமாக, மாற்றமொன்றை மேற்கொள்ள, அக்கழக நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். இதன்படி, கடந்தாண்டு டிசெம்பரில், செல்சி கழகத்திலிருந்து பதவி விலக்கப்பட்ட மொரின்ஹோவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இது தொடர்பான தகவல் வெளிவந்ததுக்கு முன்னர், எப்.ஏ கிண்ண இறுதிப் போட்டிக்குப் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்ட போது, 'கிண்ணத்தை நான் காண்பிக்கிறேன். எனது எதிர்காலம் பற்றி, எனது ஊடக நண்பர்களுடன் நான் கலந்துரையாடுவதில்லை. ஊடக நண்பர்கள், ஆறு மாதங்களாக என்னைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். நான் செய்ததை எந்த முகாமையாளர் செய்ய முடியும்?" என, லூயிஸ் வான் கால் பதிலளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .