2021 மே 15, சனிக்கிழமை

ரொனால்டோ மீது விமர்சனம்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியல் மட்ரிட் அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது, விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தவில்லை என்றே அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

கருத்துத் தெரிவித்த இங்கிலாந்தின் முன்னாள் வீரரான டெரி கிப்ஸன், இதுவரை காலமும் ரொனால்டோ அடைந்துள்ளவற்றை வைத்துப் பார்க்கும் போது, எவ்வளவைச் சாதித்திருக்கிறார், எப்படிச் சாதித்திருக்கிறார் எனப் பார்க்கும் போது, அவரை விமர்சிப்பது கடினமானது என்ற போதிலும், இறுதியாக இடம்பெற்ற 7 லா லிகா போட்டிகளில் 6 போட்டிகளில் ரொனால்டோ கோல்களைப் பெற்றிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, றியல் மட்ரிட் அணியின் கரிம் பென்ஸெமா, அவ்வணியின் பிரதானமான வீரராக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிக ஆக்ரோஷமான பாணியிலான ஆட்டத்தை பென்ஸெமா வெளிப்படுத்தியுள்ளதாகவும், சிறந்த போர்மில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்லெட்டிகோ மட்ரிட் அணிக்கெதிரான போட்டியில் றியல் மட்ரிட் அணி 1-1 என்ற சமநிலை முடிவையே பெற்றதோடு, அப்போட்டியில் பெறப்பட்ட கோலையும் கரிம் பென்ஸெமாவே பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .