2021 மார்ச் 08, திங்கட்கிழமை

விம்பிள்டனில் போட்டி நிர்ணயமா?

Editorial   / 2017 ஜூலை 20 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு இடம்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர், பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடர் ஆகியவற்றின் சில போட்டிகளில், போட்டி நிர்ணயம் இடம்பெற்றனவா என்ற சந்தேகத்தில் விசாரிக்கப்படவுள்ளன.

டென்னிஸ் நாணயப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் அதன் விசாரணைகளின் அடிப்படையில், இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்படி, பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரில் இடம்பெற்ற ஒரு போட்டியும், விம்பிள்டனில் இடம்பெற்ற 3 போட்டிகளும் விசாரணை செய்யப்படவுள்ளன. விம்பிள்டனின் 3 போட்டிகளில் 2 போட்டிகள், தகுதிகாண் போட்டிகளாகவும், ஒரு போட்டி, பிரதான தொடரில் இடம்பெற்ற போட்டியாகவும் அமைந்துள்ளது.

இவ்வாண்டு ஏப்ரல் தொடக்கம் ஜூன் வரையிலான காலப்பகுதியில், டென்னிஸ் நாணயப் பிரிவுக்கு, 53 போட்டிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன என அறிவிக்கப்படுகிறது. இந்தத் தகவல்களில் அனேகமானவை, வெற்றி பெறக்கூடிய அதிக வாய்ப்புகளைக் கொண்ட வீரர் அல்லது வீரர்களை விட, தோல்வியடைவார் என்று கருதப்படும் வீரர் அல்லது வீரர்கள் வெற்றிபெறுவர் என, சூதாட்டத்தில் அதிக பணம் செலுத்தப்படுதல் என்ற வகையில் அடங்குகின்றன. தோல்வியடைக்கூடிய வீரர் அல்லது வீரர்களுக்கு, மிக அதிகளவிலான பணம், பல தரப்பினராலும் செலுத்தப்படும் போது, சந்தேகத்துக்குரிய ஒன்றாக, அப்போட்டி மாறும்.

தங்களுக்குக் கிடைக்கின்ற தகவல்கள், போட்டி நிர்ணயம் நடைபெறுகிறது என்பதற்கான ஆதாரம் கிடையாது என, டென்னிஸ் நாணயப் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில், 83 போட்டிகள் தொடர்பான தகவல்கள், டென்னிஸ் நாணயப் பிரிவுக்குக் கிடைத்துள்ளன. இது, கடந்தாண்டின் முதல் 6 மாதங்களில் கிடைத்த 121 தகவல்களை விட, 38 தகவல்கள் குறைவானதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .