2020 நவம்பர் 28, சனிக்கிழமை

வென்று முதலிடத்தை நீடித்த செல்சி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியில், சந்தர்லேண்டைத் தோற்கடித்த செல்சி, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் தமது முதலிடத்தை நீடித்துக் கொண்டது.

செல்சி, 1-0 என்ற கோல் கணக்கில் சந்தர்லேண்டைத் தோற்கடித்தது. செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலினை, போட்டியின் 40ஆவது நிமிடத்தில் சீஸ்க் பப்ரிகாஸ் பெற்றிருந்தார்.

இப்போட்டியில், வெற்றி பெற்றதன் மூலம் பிறீமியர் லீக்கில் 10ஆவது தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்துகொண்ட செல்சி, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 40 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலுள்ளது. இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள லிவர்பூலை விட ஆறு புள்ளிகள் அதிகமாக செல்சி பெற்றுள்ளது.

லிவர்பூல், மிடில்ஸ்பேர்க் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றிருந்தது. லிவர்பூல் சார்பாக இரண்டு கோல்களைப் பெற்ற அடம் லலானா, மூன்றாவது கோலினை டிவோக் ஒரிஜி பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தார்.

மன்செஸ்டர் சிற்றி, 2-0 என்ற கோல் கணக்கில் வட்போர்ட்டைத் தோற்கடித்து, ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குப் பின்னர் தமது மைதானத்தில் வெற்றியொன்றைப் பெற்றுக் கொண்டது. சிற்றி சார்பாக, பப்லோ ஸபலெட்டா, டேவிட் சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 3-0 என்ற கோல் கணக்கில் ஹள் சிற்றியைத் தோற்கடித்தது. டொட்டென்ஹாம் சார்பாக கிறிஸ்டியான் எரிக்சென் இரண்டு கோல்களையும், விக்டர் வன்யாமா ஒரு கோலினையும் பெற்றுக் கொண்டனர்.

மன்செஸ்டர் யுனைட்டெட், 2-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பலஸைத் தோற்கடித்தது. யுனைட்டெட் சார்பாக, ஸல்டான் இப்ராஹிமோவிக், போல் பொக்பா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலினைப் பெற்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--