2021 ஜனவரி 27, புதன்கிழமை

வெற்றி-தோல்வியின்றி முடிவடைந்த இந்தியாவின் பயிற்சிப் போட்டி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 17 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான இரண்டாவது பயிற்சிப் போட்டியையும் வெற்றி தோல்வியின்றி இந்திய அணி முடித்துக் கொண்டது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை பதினொருவர் அணி, தமது முதலாவது இன்னிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ரஹ்கீம் கொர்ன்வோல் 41, ஜெர்மைன் பிளக்வூட் 36, ஜோன் கம்பெல் 34 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் அமித் மிஷ்ரா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 364 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், லோகேஷ் ராகுல் ஆட்டமிழக்காமல் 64, இரவீந்திர ஜடேஜா 56, விராத் கோலி 51 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ரஹ்கீம் கொர்ன்வோல் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை பதினொருவர் அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில், ஆறு விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றபோது போட்டிக்கு நிறைவுக்கு வந்தது. துடுப்பாட்டத்தில், ஜெர்மைன் பிளக்வூட் 51, விஸ்ஹோல் சிங், மொன்ட்சின் ஹொட்ஜ் ஆகியோர் தலா 39, ஜோன் கம்ப்பெல் 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .