2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

ஷபிக் சதம்; பாகிஸ்தான் போராட்டம்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 18 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பிறிஸ்பேர்ணில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், அசாட் ஷபிக்கின் சதத்தோடு  பாகிஸ்தான் அணி போராட்டத்தை வெளிப்படுத்த போட்டி ஐந்தாவது நாளுக்குச் சென்றுள்ளது.

490 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி, இன்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவின்போது எட்டு விக்கெட்டுகளை இழந்து 382 ஓட்டங்களைப் பெற்று போராடிவருகிறது. பாகிஸ்தான் அணி வெற்றிபெறுவதற்கு இன்னும் 108 ஓட்டங்கள் தேவையாகவுள்ள நிலையில், அசாட் ஷபிக் 100 ஓட்டங்களுடனும் யாசீர் ஷா நான்கு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, அஸார் அலி 71, யுனிஸ் கான் 65, மொஹமட் ஆமிர் 48, வஹாப் றியாஸ் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தனர். பந்துவீச்சில், மிற்சல் ஸ்டார்க், ஜக்ஸன் பேர்ட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும், நேதன் லையன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலிய அணி தமது இரண்டாவது இனிங்ஸில், உஸ்மான் கவாஜாவின் 74, ஸ்டீவன் ஸ்மித் 63 ஓட்டங்களின் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தியிருந்தது.

பாகிஸ்தான் அணி தமது முதலாவது இனிங்ஸில் 142 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. துடுப்பாட்டத்தில், சப்ராஸ் அஹமட் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். பந்துவீச்சில், ஜொஷ் ஹேசில்வூட், ஜக்ஸன் பேர்ட், மிற்சல் ஸ்டார்க் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இனிங்ஸில், ஸ்டீவன் ஸ்மித்தின் 130, பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப்பின் 105 ஓட்டங்கள் துணையோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 429 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.  பந்துவீச்சில், மொஹமட் ஆமிர், வஹாப் றியாஸ் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--