2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

ஹமில்டனுடன் நான் சிரிக்கலாம்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 14 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் பந்தய சம்பியன்ஷிப்பில், பயங்கரமான போட்டியை மெர்சிடிஸ் அணியின் சக வீரர்களான, பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டனும், ஜேர்மனியின் நிக்கோ றொஸ்பேர்க்கும் எதிர்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இறுதியில் சம்பியனாகிக் கொண்ட றொஸ்பேர்க், தானும் தனது வைரி ஹமில்டனும் ஒன்றாக சிரிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். சம்பியனாகி ஐந்து நாட்களில் ஓய்வுபெற்ற 31 வயதான றொஸ்பேர்க், பதின்ம வயதுகளிலிருந்த அடிப்படை மரியாதையால், பாரிய மோதல் ஏற்பட்டது தவிர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

தனது ஓய்வுக்குப் பின்னர், சில நல்ல கலந்துரையாடல்களை தானும் ஹமில்டனும் கொண்டிருந்ததாகத் தெரிவித்த றொஸ்பேர்க், அவரிடமிருந்து சில மாதிரியான சொற்கள் கிடைக்கப் பெற்றதாகக் கூறியுள்ளார்.

இது தவிர, யாருக்குத் தெரியும் எதிர்காலத்தில் தாங்கள் ஒன்றாகச் சேரலாம் என மேலும் றொஸ்பேர்க் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .