2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

இலங்கை அணியின் அபார பந்துவீச்சு மூலம் அரை இறுதியில் - ஹேரத் 03/5

Super User   / 2014 மார்ச் 31 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை
, நியூ சிலாந்து அணிகளுக்கிடையில் நடை பெற்ற வாழ்வா, சாவா போட்டியில் இலங்கை அணியின் அபார பந்துவீச்சு மூலம் 59 ஓட்டங்களால் நியூ சிலாந்து அணியை வெற்றி பெற்று உலக 20-20 தொடரின்  அரை  இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது இலங்கை அணி. ரங்கன ஹேரத்தின் அபார பந்துவீச்சு இலங்கை அணியின் வெற்றிக்கு கை கொடுத்தது. ரங்கன ஹேரத் 3.3 ஓவர்கள் பந்துவீசி 3 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

 

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மஹேல ஜெயவர்த்தன 26 ஓட்டங்களையும், லஹிறு திரிமான்னே 20 ஓட்டங்களையும், குஷால் பெரேரா, திசர பெரேரா ஆகியோர் தலா 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரென்ட் போல்ட், ஜிம்மி நீஷாம் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலளித்த நியூ சிலாந்து அணி 15.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 60 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கேன் வில்லியம்சன் 42 ஓட்டங்களைப் பெற்றார். மற்றவர்கள் அனைவரும் ஒற்றை படை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். ரங்கன ஹேரத் 5 விக்கெட்களையும், சசித்திர சேனாநாயக்க 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதேவேளை ரங்கன ஹேரத் இரண்டு ரன் அவுட் ஆட்டமிழப்புக்களிலும்  பங்களித்து இருந்தார். போட்டியின் நாயகனும் அவரே.

இந்த வெற்றியின் மூலம் குழு 01 இல் முதலிடம் பெற்றுள்ள இலங்கை அணி நாளைய தினம் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் அரை இறுதிப் போட்டியில் மோதும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .