2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

136 ஓட்டங்களுடன் சுருண்டது இந்திய அணி

Super User   / 2010 டிசெம்பர் 17 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 136 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


சென்சூரியனில் நடைபெறும் இப்போட்டியின் முதல்நாளான நேற்று இந்திய அணி 9 விக்கெட்இழப்பிற்கு 136 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இரண்டாவது நாளான இன்று காலை மேலும் 4 பந்துவீச்சுகளில் மேலதிக ஓட்டமெதுவுமின்றி இந்திய அணி தனது கடைசி விக்கெட்டை இழந்தது.
இந்திய அணியின் சார்பில் ஆகக்கூடுதலாக சச்சின் டெண்டுல்கர் 36 ஓட்டங்களையும் டோனி 33 ஓட்டங்களையும் பெற்றனர். ஹர்பஜன் சிங் 27 ஓட்டங்களைப் பெற்றார்.


தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களில் மோர்ன் மோர்கெல் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் மோர்கெலின் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும். டேல் ஸ்டேர்ன் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஜக் கலிஸ் 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும்  வீழ்த்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--