2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க டெஸ்ட்டின் 2ஆம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.

பிறிஸ்பேணில் இடம்பெற்றுவரும் இப்போட்டியின் இன்றைய நாள் ஆட்டம் இன்று காலை 5.30 இற்கு ஆரம்பிக்கவிருந்த போதிலும் தொடர்ச்சியான மழை காரணமாக ஆட்டத்தை ஆரம்பிப்பது சாத்தியப்பட்டிருக்கவில்லை.

தொடர்ச்சியான மழைத்தூறல்கள் காணப்பட்ட போதிலும் போட்டி ஏதாவதொரு கட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு இறுதிநேரம் வரை காத்திருந்த போதிலும் இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பு எட்டியிருக்கவில்லை.

இன்றைய நாள் ஆட்டம் முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளதால் நாளைய நாள் ஆட்டம் வழக்கத்தை விட 30 நிமிடங்கள் முன்னதாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்க அணி ஹசிம் அம்லாவின் ஆட்டமிழக்காத 90 ஓட்டங்கள், ஜக்ஸ் கலிஸின் ஆட்டமிழக்காத 84 ஓட்டங்கள் ஆகியவற்றின் துணையோடு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X