Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 25 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதாபியில் சற்றுமுன் முடிவுற்ற இலங்கை அணியுடனான இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.3 ஓவர்களில் 141 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
தினேஷ் சந்திமால் 44 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்றார். அணித்தலைவர் திலகரட்ன தில்ஷான் 15 பந்துகளில் 28 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணியின் முன்வரிசை வீரர்கள் வேகமாக ஓட்டங்களைக் குவித்த போதிலும் பின்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். அவ்வணியின் கடைசி 7 விக்கெட்டுகள் 22 ஓட்டங்கள் இடைவெளியில் வீழ்ந்தன.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் அய்ஸாஸ் சீமா 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
மிஸ்பா உல் ஹக் 38 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றர். ஒரு சிக்ஸர் 3 பௌண்டரிகளும் இவற்றில் அடங்கும். கடைசி இரு ஓவர்களில் பாகிஸ்தான் அணிக்கு 23 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 19 ஆவது ஓவரில் அவ்ரிடி இரு சிக்ஸர்களை அடித்தமை பாகிஸ்தான்அணியின் வெற்றியை இலகுவாக்கியது.
அஸாட் சபீக் 33 பந்துகளில் 33 ஓட்டங்களையும் சஹீட் அவ்ரிடி 15 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
6 minute ago
10 minute ago
1 hours ago
1 hours ago
neethan Saturday, 26 November 2011 06:42 AM
ராசியில்லா டில்ஷான், சோர்ந்து விடாதே!
Reply : 0 0
Jeganram Saturday, 26 November 2011 06:54 AM
இலங்கை வென்றிருந்தால் தான் ஆச்சரியம்
Reply : 0 0
ஓட்டமாவடி ஜெமீல் Saturday, 26 November 2011 01:15 PM
எமது நாட்டு அணியில் ஒரு கொன்பியூசான நிலைமை தெரிகிறது. கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (அடிக்கடி கலைத்தல்) , அணித்தேர்வு, என பல்வேறு நிலையில்லாத் தன்மை நிலவுவதால் வீரர்கள் மனதை ஒருமுகப்பத்தி விளையாடுவதில் சிரமப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. எனிவே, கொங்கிராட்ஸ் டு பாக்கிஸ்தான் டீம்.
Reply : 0 0
ala Saturday, 26 November 2011 03:59 PM
கடந்த உலக கோப்பை போட்டியில் இந்தியாவிடம் கோப்பையை மட்டும் தான் கொடுத்தார்கள் என்று நினைத்தால் இறுதி போட்டிவரை சென்று அசத்திய திறமையையும் அல்லவா தொலைத்துவிட்டார்கள் இலங்கை அணி தத்தளிப்பதை பார்க்க பரிதாபமாக உள்ளது.
Reply : 0 0
ஏ.பி.சாஜஹான் Saturday, 26 November 2011 07:02 PM
தென் ஆபிரிக்காவுக்கு செல்வதற்கு முன் இலங்கை அணியை புனருத்தாரணம் செய்ய வேண்டும். இல்லா விட்டால் தொடரை பறி கொடுக்க வேண்டி ஏற்படும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
1 hours ago
1 hours ago