2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மூச்சுத் திணறுமா நெதர்லாந்து அணி..?

A.P.Mathan   / 2010 ஜூலை 11 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


எமது அணியினை வீழ்த்தி வெற்றிபெறவேண்டுமானால் நெதர்லாந்து வீரர்கள் மூச்சுத் திணற வேண்டும் என ஸ்பெயின் முன்கள வீரர் டேவிட் வில்லா தெரிவித்திருக்கிறார்.

2010ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் இறுதி நிகழ்வு இன்று தென்னாபிரிக்காவிலுள்ள ஜொகன்னஸ்பேர்க் சொக்கர் சிற்றி விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கிறது. இந்த இறுதி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகிவிட்ட நிலையிலேயே ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா மேற்படி கருத்தினைத் தெரிவித்திருக்கிறார்.

இம்முறை ‘தங்கப் பாதணி’ வெல்லக்கூடிய வாய்ப்பு வில்லாவுக்கே அதிகமாக இருக்கிறது. இவ்வருட உலக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இதுவரை 5 கோல்களைப் போட்டிருக்கிறார். இன்று இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியினை எதிர்த்து ஸ்பெயின் அணி மோதவுள்ளது. டேவிட் வில்லா முன்கள வீரர் என்பதால் மேலும் கோல்களைப் போடும் வாய்ப்பு அவருக்கு அதிகமாகவே காணப்படுவதாக கால்பந்தாட்ட விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இன்றைய இறுதிநாள் நிகழ்வில் பல கலை நிகழ்வுகளும் லேசர் லைட் சாகசங்களும் நடைபெற ஏற்பாடாகியிருக்கின்றன. இந்நிலையில் இன்றைய இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையுமென கால்பந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். உலகளாவிய ரீதியில் பல மில்லியன் மக்கள் இந்த நேரடி போட்டியினை நேரடியாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்து ரசிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .