Editorial / 2026 மார்ச் 02 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரொசேரியன் லெம்பட்
"கடலில் கரைந்துவிட்ட காலங்களும் வரலாற்றில் தடம் பதித்துவிட்ட நினைவுகளும்" எனும் நூலின் முதலாம் பாகம், இங்கிலாந்தின் வெம்பிளி (Wembley) நகரில் உத்தியோகபூர்வமாக ஞாயிற்றுக்கிழமை (01) அன்று வெளியிடப்பட்டது.
தமிழீழப் போராட்ட வரலாற்றில் கடற்புலிகளின் பங்களிப்பு எத்தகையது என்பதை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தும் நோக்கிலும், அவர்களது வீரச் சாதனைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் நோக்கிலும் 'கடலின் மடியின்' குழுமத்தினால் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
கடற்புலிகளால் போராட்டக் காலங்களில் கடற்பரப்பில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள், இக்கட்டான சூழ்நிலைகளிலும் அவர்கள் மக்களுக்காக எவ்வாறான போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள் போன்ற உண்மையான நிகழ்வுகளை உள்ளடக்கிய ஓர் ஆவணப் பெட்டகமாக இந்நூல் திகழ்கிறது.
59 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
2 hours ago