2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

கிண்ணத்தை தொட ஓடிவந்த ரசிகர்

A.P.Mathan   / 2010 ஜூலை 11 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


கால்பந்தாட்ட உலகக் கிண்ண இறுதிப் போட்டியின்போது மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த உலகக்கிண்ணத்தை தொடுவதற்காக ஓடிவந்த ரசிகர் ஒருவரை பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்தனர்.

கடந்தமுறை உலகக்கிண்ணம் வென்ற இத்தாலி அணியின் பபியோ கன்னவாரோ, போட்டி ஆரம்பிக்கும் முன்னர் உலகக் கிண்ணத்தினை எடுத்துவந்து மைதானத்தில் வைத்தார். அதன்பின்னர் இறுதிப் போட்டியில் மோதுகின்ற இரு அணிகளும் மைதானத்துக்கு வந்தன.

இச்சந்தர்ப்பத்தில் மைதானத்தின் ஓரப்பகுதியால் ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்து உலகக் கிண்ணத்தினை தொடுவதற்கு முயற்சித்தார். சுதாகரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் 7பேர் உடனடியாக அவரை மடக்கிப் பிடித்து மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--