2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

உலக கிண்ண கால்பந்து போட்டி; ஜேர்மன் வீரருக்கு “பொன் பாதணி”

Menaka Mookandi   / 2010 ஜூலை 12 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின், மூன்றாவது இடத்தை பெற்ற ஜேர்மன் அணியின் வீரர் தோமஸ் முல்லர், குறித்த போட்டியின்  உயரிய விருதாகக் கருதப்படும் “பொன் பாதணி”யினை சுவீகரித்தார்.

தென்னாபிரிக்காவில் நடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஸ்பெயினிடம் தோல்வியுற்ற நெதர்லாந்து அணி 2ஆவது இடத்தையும், உருகுவே அணியை வென்ற ஜேர்மன் அணி 3ஆவது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டது.

உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட உலகக் கிண்ணப் போட்டியி்ல், ஸ்பெயினின் டேவிட் வில்லா, நெதர்லாந்தின் ஸ்னைடர், உருகுவேயின் போர்லன் மற்றும் ஜேர்மனியின் தோமஸ் முல்லர் ஆகியோர் தலா 5 கோல்கள் அடித்து சமநிலையில் “பொன் பாதனி”க்கு போட்டியிட்டனர்.

மேற்படி நான்கு வீரர்களும் தலா 5 கோல்களை அடித்து சமநிலையில் இருந்தமையினால், ஸ்பெயின் அணி வீரர்கள் கோல் அடிக்க உதவியவர் யார்? என்பது குறித்து கணக்கிடப்பட்டது.

இந்நிலையில், ஸ்பெயின் அணி வீரர்கள் 3 கோல்களை அடிப்பதற்கு தோமஸ் முல்லர் உதவியிருந்தார் என்ற அடிப்படையில் கால்பந்தாட்டத்தின் உயரிய விருதாகக் கருதப்படும்  “பொன் பாதணி” விருது, முல்லருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் இளம் வீரருக்கான  விருதும் அவருக்கே கையளிக்கப்பட்டது.  

இதேவேளை, உருகுவேயின் போர்லானுக்கு "தங்கப் பந்து" விருதும், இந்த உலகக் கிண்ணத்தின் சிறந்த வீரர் விருதும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .