2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

திருமலை கிரிக்கெட் மைதானப் பணிகளை ஆளுநர் பார்வையிட்டார்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 14 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் நகரசபையினால் அமைக்கப்பட்டு வரும் கிரிக்கெட் மைதானத்தை கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம நேற்று செவ்வாய்க்கிழமை காலை பார்வையிட்டார்.
 
வடக்கு, கிழக்கு கரையோர அபிவிருத்தி திட்டத்தின் 7 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் இதன் ஆரம்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மைதானத்தை மட்டுப்படுத்தும் வேலைகள் முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
முதல் தர போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக இம்மைதானம் அமைக்கப்பட்டு வருகின்றது. மட்டுப்படுத்தப்பட்டு புற்கள் பதிக்கப்பட்ட பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதன் அமைப்பு வேலைகளை முன்னெடுக்கவுள்ளது.
 
இது பற்றி ஆராயும் விசேட கூட்டமொன்றும் நேற்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள், திருகோணமலை நகரசபைத் தலைவர், பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர், திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள், வடக்கு கிழக்கு கரையோர அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
இன்னும் 3 மாத காலத்தில் இப்பணிகள் யாவும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
2012ஆம் வருடம் இலங்கையில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் முன்னேற்றமாக நாட்டின் பல இடங்களிலும் முதல்த்தர கிரிக்கெட் மைதானங்கள் அமைக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.
 
கிழக்கு மாகாண ஆளுநர் எடுத்த உற்சாகம் காரணமாக திருகோணமலையில் இதனை அமைக்க இலங்கை கிரிக்கெட்  சபை நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக  மைதான மத்தியில் ஒரு ஆடுகளமும், 3 பயிற்சிக்கான பக்க ஆடுகளங்களும் இதில் அமைக்கப்படவுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--