2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

உடுவில் பிரதேசச் செயலக அணி யாழ். மாவட்ட கால்பந்தாட்டச் சம்பியன்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் உதவியுடன் யாழ். மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு யாழ் மாவட்ட பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே நடத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் உடுவில் பிரதேச செயலக அணி யாழ். மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் உடுவில் பிரதேச செயலக அணியும் பருத்தித்துறை பிரதேச செயலக அணியும் மோதிக் கொண்டன.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல்கள் பெறக் கிடைத்த சந்தர்ப்பங்களை உரிய முறையில் பயன்படுத்த தவறிய நிலையில் ஆட்டம் கோல்கள் எதனையும் இரு அணிகளும் பெறாத நிலையில் நிறுத்தப்பட்டது.
 
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் பெறவேண்டும் என துடிப்புடன் களமிறங்கி மோதிக்கொண்டன. 17 ஆவது நிமிடத்தில் உடுவில் பிரதேச செயலக அணி வீரர் பிரதீபன் தமது அணிக்கான முதலாவது கோலை அடித்தார்.

இதனைத் தொடர்ந்து போட்டி மிகவும் சூடு பிடித்தது. போட்டி முடிவடைய நான்கு நிமிடங்கள் இருந்த நிலையில் உடுவில் பிரதேச செயலக அணிவீரன் தசரதன் மீண்டும் தனக்குக் கிடைத்த பந்தை உரிய முறையில் அடித்து ஒரு கோலை பெற்றுக் கொண்டார்.
 
ஆட்ட நிறைவில் உடுவில் பிரதேச செயலக அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் பருத்தித்துறை பிரதேச செயலக அணியை வென்று யாழ். மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--