Super User / 2010 ஜூலை 17 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த புதன்கிழமை முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றபோது பார்வையாளர்களின் வன்முறை காரணமாக அப்போட்டி சுமார் 30 நிமிடங்களின்பின் நிறுத்தப்பட்டது.
அப்போட்டியை இன்று மாலை மீண்டும் நடத்த முயற்சித்தபோது, போட்டியை முதலிலிருந்து நடத்த வேண்டும் என இஸிபத்தன கல்லூரி அணி வலியுறுத்தியது. ஆனால், சென் பீற்றர்ஸ் கல்லூரி அணியினரும் நடுவர்களும் முந்தைய போட்டி இடைநிறுத்தப்பட்ட இடத்திலிருந்தே இன்றைய போட்டி தொடரப்பட வேண்டும் எனக் கூறினர்.
இதை ஏற்றுக்கொள்ள மறுத்த இஸிபத்தன அணி, போட்டியில் பங்குபற்றாமல் வெளிநடப்புச் செய்தது. இதனால் சென் பீற்றர்ஸ் கல்லூரி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் ரோயல் கல்லூரி அணியுடன் சென் பீற்றர்ஸ் கல்லூரி அணி மோதவுள்ளது.
இன்றைய போட்டியை முன்னிட்டு பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினரும் கலகத்தடுப்பு பொலிஸாரும் மைதானத்தைச் சூழ குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு: இந்திரரட்ண பாலசூரிய)


1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago