2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

விசேட சலுகையுடன் ஜனாதிபதி வருகிறார்

Editorial   / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட விசேட சலுகைத் திட்டமொன்றை இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க,  சமர்ப்பிக்கவுள்ளதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சபையில் தெரிவித்தார்.

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மக்களுக்குப் புதிய சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு எதிர்க்கட்சியின் முதற்கோலாளர் கயந்த கருணாதிலக்க விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே சபை முதல்வர் இதனைத் தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விசேட பொதி ஜனாதிபதியினால் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .