2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

எடிசலாட்டின் கோல்ஃப் கிளசிக் போட்டிகள் வெற்றிகரமாக முடிவு

Super User   / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எடிசலாட் அறிமுக கோல்ஃப் கிளசிக் போட்டிகள் அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்தன. இப்போட்டிகள் கொழும்பு றோயல் கோல்ஃப் கழக மைதானத்தில் நடைபெற்றன.

முற்றிலும் கோல்ஃப் கழக அங்கத்தவர்களுக்கும், எடிசலாட் வாடிக்கையாளர்களுக்கெனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டிகள் வௌ;வேறு பிரிவுகளில் நடைபெற்றன. குழு  'ஏ' யில் 0 – 09, குழு 'பி'யில் 10 – 18, குழு 'சி' யில், 19 – 28, சிரேஷ்ட பிரிவு மாஸ்டர்ஸ் பிரிவு, பெண்கள் வெள்ளி பிரிவு மற்றும் பெண்கள் வெண்கல பிரிவு என இந்த பிரிவுகள் அமைந்திருந்தன.

ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கும், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. முழுச் சுற்றுப் போட்டியினதும் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட மிந்திக ஹெட்டியாராச்சி (42 புள்ளிகள்) தனது நண்பருடன் அபுதாபிக்கு கோல்ஃப்  சுற்றுலாவுக்கான பூரண அனுசரணை வழங்கப்பட்டது. அத்துடன் சர்வதேச கோல்ஃப் போட்டிகள் இரண்டை கண்டு களிப்பதற்கான டிக்கட்களும் வழங்கப்பட்டன.

அத்துடன் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்குமிட வசதிகள், மூன்று சுற்று போட்டிகளில்  பங்குபற்றுவதற்கான இலவச டிக்கட்களும்  வழங்கப்படவுள்ளன. பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற ஃபிரான் டி மெல், துபாய்க்கு சென்று வருவதற்கான வியாபார வகுப்பு
விமானச் பயண டிக்கட் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்குஇ கையடக்கத் தொலைபேசிகளும், இலவச அழைப்பு நேரங்களும் வழங்கப்பட்டிருந்தன.

இப்போட்டிகள் நடைபெற்ற இறுதி நாளில் விருதுகள் வழங்கும் களியாட்ட நிகழ்வின்போது, 'எடிசலாட் எலைட் கழகம்' ஸ்தாபிக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டது. இதன்  நோக்கம் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், வாடிக்கையாளரிடையே
பிரபல்யத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது. இந்த கழகத்தில் இணைவதற்கான ஆகக் குறைந்த தகுதி, றோயல் கோல்ஃப் கழக உறுப்பினராக இருப்பதுடன் மாதமொன்றுக்கு 2500 ரூபாவுக்கு குறையாமல் அழைப்புகளை மேற்கொள்பவராக இருத்தல் போன்றனவாகும்.

இந்த எடிசலாட் எலைட் கழகத்தின் உறுப்பினர்களுக்கு கோல்ஃப் விளையாட்டு உபகரணங்கள், வாடிக்கையாளர்களுக்கு முதன்நிலை சேவைகளை வழங்கல், கழிவுகள், பிராந்திய கோல்ஃப் கழகங்களில் (விக்டோரியா கோல்ஃப் கழகம்) விளையாடுவதற்கான விசேட சலுகைகள்
வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X