2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

கிளிநொச்சி இளைஞர் சேவை மன்ற மாவட்ட விளையாட்டு போட்டி

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிளிநொச்சி மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட ரீதியிலான விளையாட்டுப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை, கனகபுரம் மைதானத்தில் நடைபெற்றது.

மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி தவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மிக நீண்ட காலத்திற்குப் பின் நடைபெற்ற இப்போட்டியில் கரைச்சி, கண்டாவளை, பளை, பூநகரி போன்ற பிரதேச சபைகள் சார்பில் பங்குபற்றி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பிரிசில்கள் வழங்கப்பட்டன.

அங்கு பிரதம விருந்தினராக் கலந்து கொண்டு உரையாற்றிய சந்திரகுமார் எம்.பி, இந்த மாவட்டத்திலிருந்து தேசிய இளைஞர் சேவை மன்ற போட்டியில் கலந்து கொள்வதற்கு தெரிவு செய்யப்பட்ட அணிக்கான விளையாட்டு உடைகளை தான் வழங்குவதாகத் தெரிவித்தார்.

அத்தோடு, தேசிய விளையாட்டு போட்டி கண்டியில் நடைபெற இருக்கின்ற நிலையில், வடமாகாணத்திலிருந்து கிளிநொச்சி சார்பாக கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்களுக்கான ஊக்குவிப்புப் பணமும் இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .