2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

இந்தியாவின் பக்கம் திரும்பியிருக்கும் கொல்ப் உலகம்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிரிக்கெட், ஹொக்கி, செஸ், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பல போட்டிகளில் சாதனை படைத்துவரும் இந்திய வீரர்களின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறார் கொல்ப் வீரர் அர்ஜுன் அட்வால்.

கொல்ப் நிபுணர்களின் சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த விண்டாம் சம்பியன்ஷிப் போட்டி அண்மையில் அமெரிக்காவின் வட கலிபோர்னியா- கிரின்போறோவில் நடைபெற்றது. இப்போட்டில் பங்குபற்றினார் 'சர்வதேச அந்தஸ்தில்லாத' இந்திய கொல்ப் வீரர் அர்ஜுன் அட்வால். சர்வதேச கொல்ப் சம்மேளன தகுதிபெறாத வீரர்கள் (தொழில்முறைசாராத வீரர்கள்) ‘PGA’ (கொல்ப் நிபுணர்களின் சம்மேளனம்) போட்டிகளில் பங்குபற்ற வேண்டுமானால் பல தகுதி போட்டிகளில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற சர்வதேச கொல்ப் விதிக்கேற்ப களமிறங்கிய அர்ஜுன், அனைத்து தகுதிப் போட்டிகளிலும் வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்கும் தெரிவாகினார். இதனால் சர்வதேச கொல்ப் ரசிகர்களின் பார்வை அர்ஜுன் பக்கம் திரும்பியது.

இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சர்வதேச கொல்ப் போட்டியினில் வெற்றிபெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையினையும் அர்ஜுன் பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தொழில்முறை சாராத வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியிருப்பது இதற்கு முன்னர் 1986ஆம் ஆண்டே இடம்பெற்றது. பிறட் வட்ஸ்வோர்த் என்ற கொல்ப் வீரர் 1986ஆம் ஆண்டு தொழில்முறைசாரா வீரராக களமிறங்கி இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியிருந்தார். அதன் பின்னர் அதாவது 24 வருடங்களின் பின்னர் இந்திய கொல்ப் வீரர் அர்ஜுன் அட்வால் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றிருக்கிறார்.

இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்து தற்சமயம் அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்துவரும் அர்ஜுனுக்கு கடந்த வருடம் பழுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் நீண்டகாலமாக கொல்ப் விளையாட முடியாமல் தவித்தார். கடந்த மாதம் போதிய பணம் இன்மையால் சர்வதேச கொல்ப் சம்மேளன அனுமதியினையும் இழந்திருந்தார். இத்தனை சவால்களையும் சமாளித்து இன்று 918 ஆயிரம் அமெரிக்க டொலர்களை பரிசாக பெற்றிருக்கிறார் அர்ஜுன். இந்த அபார வெற்றியினால் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு எவ்வித தகுதிச் சுற்றுக்களிலும் பங்குபற்றாமல் சர்வதேச கொல்ப் போட்டிகளில் பங்குபற்றும் அனுமதியையும் அர்ஜுன் அட்வால் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--