2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக ராஜதுரோக குற்றச்சாட்டு வழக்கு

Super User   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு எதிராக அந்நாட்டு சட்டத்தரணியொருவர் ராஜதுரோக குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து சட்டத்தரணி அஹமட் எனும் இச்சட்டத்தரணி இவ்வழக்கைத் தொடுத்துள்ளார்.

இவ்வழக்கு இன்று  செவ்வாய்க்கிழமை லாகூர் மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடுவது நாட்டின் மீது விசுவாசமின்மைக்குச் சமன் எனவும் அது இராஜதுரோகக் குற்றச்சாட்டின் கீழ் வருகிறது எனவும் சட்டத்தரணி அஹமட் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்குரிய மேற்படி வீரர்கள் முழு நாட்டையும் ஏமாற்றிவிட்டனர். நாட்டின் அரசியலமைப்பையும் மீறியுள்ளனர். அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டால் ஆயுட்காலத் தடைவிதிக்கப்படுவதுடன் அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நான்காவது டெஸ்ட் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களுக்குப் பணம் கொடுத்தாக கூறப்படும் மஹார் மஜீட் என்பவரை பொலிஸார் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் பொலிஸ் விசாரணையை எதிர்நோக்கியுள்ளனர்.
பாகிஸ்தானில் இராஜதுரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .