Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூதாட்டத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டு, பிரித்தானிய பொலிஸாரின் விசாரனைக்குட்பட்ட பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள் மூவர் தாயகம் இன்று திரும்பியுள்ளனர்.
டெஸ்ட் அணியின் தலைவர் சல்மான் பட், பந்து வீச்சாளர்களான மொஹமட் அமீர் மற்றும் முஹமட் அஸிவ் ஆகியோரே பாகிஸ்தானுக்குத் திரும்பியுள்ளனர். ஏனைய வீரர்கள் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் நிலையில் இவ்வீரர்கள் மூவரும் தாயகம் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் லாகூர் விமான நிலையத்தில் பதாகைகளையும் பாதணிகளையும் ஏந்திய வண்ணமும் இருந்தனர்.
எனினும் வீரர்கள் மூவரும் விமான நிலையத்தின் பின் கதவால் வேகமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
விரும்பத்தகாத சந்தர்ப்பங்களை தவிர்த்துக் கொள்வதற்காக அவர்களை மிகவும் பாதுகாப்பாக சரக்குப் பகுதியூடாக அழைத்துச் சென்றதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்போட்டியில் பாகிஸ்தானிய வீரர்கள் வேண்டுமென்றே நோபோல் வீசுவதற்கு பணம் வாங்கியதாக கடந்த மாதம் பிரிட்டிஸ் பத்திரிகைகளால் குற்றம் சாட்டப்;பட்டதால் மேற்படி வீர்ர்கள் இங்கிலாந்து பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவ்வீரர்கள் தாங்கள் எந்த தவறுகளையும் செய்யவில்லை என்று கூறுகின்றனர். அவர்கள் செப்டெம்பர் 3 அம் திகதி பிரித்தானிய பொலிஸாரால் விசாரிக்கப்பட்ட பின்பு எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இந்த ஆர்ப்பாட்டங்களை எதிர்பார்த்து, கிரிக்கெட் வீரர்களின் உறவினர்கள் பலர் அவ்வீரர்களுக்கு ஆதரவான சுலோகங்களுடன் பதாதைகளை ஏந்திய வண்ணம் விமானநிலையத்தில் திரண்டிருந்தனர். 'சல்மான் பட் நீடுழி வாழ்க', 'ஆங்கிலேய ஊடகங்கள் ஒழிக' என்பன போன்ற வாசகங்கள் அதில் எழுதப்பட்டிருந்தன.
இக்கிரிக்கெட் வீரர்கள் மூவரும் நோன்பு பண்டிகையை முன்னிட்டு அவர்களின் பெற்றோரினதும் கிரிக்கெட் சபையினதும் கோரிக்கையின் பேரில்நாடு திரும்பியுள்ளதாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மலிக் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர்கள் மீது தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவம் தேவையானால் மேலதிக விசாரணைகளுக்காக மீண்மட் இங்கிலாந்து செல்வார்கள் எனவும் அவர் கூறினார்.
48 minute ago
58 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
58 minute ago
3 hours ago