Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யூ.எல்.மப்றூக்)
கொழும்பில் இன்று நடைபெறவுள்ள அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருந்த சம்மாந்துறை வலய மாணவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் இன்று காலை 8.30 மணியளவிலேயே வலயக் கல்வி அலுவலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதனால் இன்றைய நிகழ்வுகளில் கலந்து கொள்ளவிருந்த மாணவிகளால் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதாகவும், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பாடசாலை அதிபர் தெரிவித்தனர்.
இது குறித்து நாவிதன்வெளி, அன்னமலை வித்தியாலயத்தின் அதிபர் இலட்சுமணன் தெரிவிக்கையில், "எமது பாடசாலை சார்பாக இன்று கொழும்பில் இடம்பெறும் தேசிய விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருந்த இரண்டு மாணவிகளுக்கான அழைப்புக் கடிதங்களும், அவை தொடர்பான பிரசுரங்களும் வலயக் கல்வி அலுவலகத்தினால் இன்று காலை 8.30 மணியளவிலேயே அனுப்பி வைக்கப்பட்டன.
இன்று கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில், சம்மாந்துறை வலயத்திலிருந்து இன்றே சென்று கலந்து கொள்வதென்பது முடியாத காரியமாகும். பல எதிர்பார்ப்புகளுடன் இருந்த எமது மாணவர்களுக்கு இது பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது" என்றார்.
இப்பாடசாலையைச் சார்ந்த எஸ்.லோகேஸ்வரி 100 மீற்றர், 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப்போட்டிகளிலும் கே. சாந்தினி 400 மீற்றர் தடை தாண்டதல் ஓட்டத்திலும் பங்குபற்றவிருந்தனர்.
இதேவேளை, இவ்வாறு மாணவர்களுக்கு அழைப்புக்கள் தாமதமாகிக் கிடைத்தமைக்குக் காரணம் யார் என்பது குறித்து உரிய அதிகாரிகள் கண்டறிவதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான தீர்வுகளும் வழங்கப்பட வேண்டுமென மாணவர்களின் பாடசாலைத் தரப்பினரும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago