2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மகளிர் கிரிக்கெட்டில் வின்சன்ட் உயர்தர பாடசாலை சம்பியன்

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

alt

                                                         (றிபாயா நூர்)

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலைக்கும் மட்டக்களப்பு வின்சன்  மகளிர் உயர்தர  பாடசாலைக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பாடுமீன் சமர் வெற்றிக் கிண்ண  கிரிக்கெட் போட்டியில்  மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை 50 ஓட்டங்களால் வெட்டியீட்டி, பாடுமீன் சமர் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.

லயன்ஸ் கழகத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் நடத்தப்பட்ட சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி இன்று காலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கோலகலமாக ஆரம்பமானது.

20  ஓவர்களைக் கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில்,  முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு வின்சன்ட்  மகளிர் உயர்தர பாடசாலை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர்தர பாடசாலை அணி  20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இப்போட்டியில்  மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் உயர்தர பாடசாலை 50 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இப்போட்டியின் சிறந்த வீராங்கனையாக சௌமியா பாலச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.

இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன், மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் போல், கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் லயன்ஸ் கழக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு  பரிசில்களை வழங்கி வைத்தனர்.

alt

alt

alt
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .