Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்று, போட்டிகளை நடத்தும் நாடான இந்தியா பதக்கப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப்பெற்றது.
இதுவரை 5 தங்கப்பதக்கம் உட்பட 11 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது. இதேவேளை 9 தங்கப்பதக்கங்கள் உட்பட 24 பதக்கங்களுடன் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.
துப்பாக்கிச் சுடுதலில் இரு தங்கப் பதக்கங்களையும் கிறெக்கோ ரோமன் மல்யுத்தப் போட்டிகளில் 3 தங்கப்பதங்களையும் இந்தியா பெற்றது.
இதேவேளை இலங்கை இப்போட்டிகளில் இன்று தனது முதல் பதக்கத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
62 கிலோகிராமுக்கு உட்பட்டவர்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் அன்டன் சுதேஷ் பீரிஸ் குருகுலசூரியகே வெண்கலப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 அவுஸ்திரேலியா 9 10 5 24
2 இந்தியா 5 4 2 11
3 இங்கிலாந்து 2 6 4 12
4 மலேஷியா 2 2 1 5
5 தென்னாபிரிக்கா 2 1 1 4
6 கனடா 2 0 5 7
7 சிங்கப்பூர் 2 0 0 2
8 நைஜீரியா 1 1 1 3
9 ஸ்கொட்லாந்து 1 0 2 3
10 நியூஸிலாந்து 0 1 1 2
10 வேல்ஸ் 0 1 1 2
12 பங்களாதேஷ் 0 0 1 1
12 இலங்கை 0 0 1 1
12 ட்ரினிடாட் அன்ட் டுபாக்கோ 0 0 1 1
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
56 minute ago