2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்க அணி புதிய சாதனையுடன் வெற்றி

Super User   / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸிம்பாப்வே அணியுடனான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 272 ஓட்டங்களால் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

தென்னாபிரிக்காவின் பெனோனி நகரில் நேற்று  நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 399 ஓட்டங்களைப் பெற்றது.

ஜீன் போல் டுமினி 129 ஓட்டங்களையும் டி வில்லியர்ஸ் 109 ஓட்டங்களையும் பெற்றனர். இவ்விருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 219 ஓட்டங்களைப் பெற்றமையும் தென்னாபிரிக்க அணியின் புதிய சாதனையாகும்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 127 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.  அவ்வணியின் சார்பில் ஆகக்கூடுதலாக டடேண்டா தைபு 28 ஓட்டங்களைப் பெற்றார்.

இதனால் தென்னாபிரிக்க அணி 272 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. ஒருநாள் சர்வதேச போட்டியொன்றில் அவ்வணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

உலக ரீதியில் ஒருநாள் போட்டியொன்றில் ஓர் அணி பெற்ற இரண்டாவது மிகப்பெரிய வெற்றி இது. 2008 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி 290 ஓட்டங்களால் வென்றமையே சாதனையாக உள்ளது.

மேற்படி வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்கா 3-0 விகிதத்தில் வென்றுள்ளது.  மூன்றாவது போட்டியின் சிறப்பாட்டக் காரராக டுமினியும் சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக் காரராக டி வில்லியர்ஸும் தெரிவாகினர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .