2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

உலகக்கிண்ணப் போட்டிகளுடன் இலங்கை அணியின் பயிற்றுநர் ஓய்வு

Super User   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்வரும் உலகக் கிண்ண சுற்றுப்போட்டியுடன் இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் பதவியிலிருந்து தான் விலகப்போவதாக ட்ரவோர் பெய்லீஸ் தெரிவித்துள்ளார்.

பெய்லீஸின் ஒப்பந்தக் காலம் 2011 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண சுற்றுப்போட்டியுடன் முடிவடையவுள்ளது. அதன்பின் இந்த ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு தான் விண்ணபிக்கப் போவதில்லை எனவும் புதிய வேலையொன்றை தான் எதிர்பார்த்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய பத்திரிகையொன்றுக்கு அவர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பெய்லீஸ், நியூ சௌத் வேல்ஸ் மாநில அணியின் பயிற்றுநராக கடமையாற்றியவர். 2007 ஆம் ஆண்டு டொம் மூடிக்குப் பதிலாக ட்ரவோர் பெய்லீஸ் இலங்கை அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் தற்போதைய உதவிப் பயிற்றுநரான ஸ்டுவர்ட் லோஇ புதிய பயிற்றுநராக பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--