Super User / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுநலவாய விளையாட்டு விழாவின் குத்துச்சண்டைப்போட்டியில் இலங்கை வீரர் மஞ்சு வன்னியாராச்சி பெற்ற தங்கப்பதக்கம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
30 வயதான மஞ்சு வன்னியாராச்சி 19 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்திருந்தார். ஆனால் அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பானையைக் கண்டறிவதற்கான சோதனையில் தோல்வியுற்றார்.
இது குறித்து விளக்கமளிக்குமாறு தேசிய ஒலிம்பிக் குழு மஞ்சுவுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் விசாரணைகள் முடிவடையும் வரை மஞ்சுவின் பதக்கத்தை எமது பாதுகாப்பில் வைத்துள்ளோம் என தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அறியாத்தனமாக தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை மஞ்சு பயன்படுத்தியிருப்பதாக ஹேமசிறி பெர்னாண்டோ கூறினார்.
மஞ்சுவின் சிறுநீர் மாதிரியின் இரண்டாவது பகுதி சோதனைக்குட்படுத்தப்பட்டு அதிலும் அவர் தோல்வியுற்றால் அவரின் பதக்கம் வாபஸ்பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு குறைந்தபட்சம் 2 வருடகாலத் தடை விதிக்கப்படலாம்.
விளையாட்டு வீரர்களை சிறந்த வலிமையுடன் விளங்கச் செய்வதாக பெயர்பெற்ற குருநாகலிலுள்ள மருத்துவர் ஒருவரிடம் தான் சிகிச்சை பெற்றதாக மஞ்சு ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது மேற்படி மருத்துவரின் தகுதி குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago