2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

வயது குறித்து கவலையில்லை: சச்சின்

Super User   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2002 ஆம் ஆண்டின் பின்னர் மீண்டும் ஐ.சி.சி. டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தைப் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது வயது குறித்து தான் கவலையடைவில்லை எனக் கூறியுள்ளார்.

37 வயதான சச்சின் டெண்டுல்கர், நேற்றுமுன்தினம் இரவு லண்டனில் நடைபெற்ற ஆசிய விருதுவழங்கல் நிகழ்ச்சியில் பங்குபற்றியபோது இதைத் தெரிவித்துள்ளார்.

'தற்போது எனது கிரிக்கெட் விளையாட்டில் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் எவ்வளவு காலம் என்னால் விளையாட முடியும் என்பது தெரியவில்லை. ஆனால், எனக்கு மகிழ்ச்சியளிக்கும் வரை நான் என்னால் இவ்விளையாட்டுக்குப் பங்களிக்க முடியும் எனக் கருதும் வரை நான் விளையாடுவேன்.
எனது வயது குறித்து நான் கவலையடையவில்லை. வயது மனதில்தான் உள்ளது' என சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

அண்மையில் அவுஸ்திரேலியாவுடனான  டெஸ்ட் போட்டியொன்றின்போது முதல் இன்னிங்ஸில் டெண்டுல்கர் 214 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் இந்திய அணி வெற்றியீட்டுவதற்கு வழியமைத்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தொடரின்போது, டெஸ்ட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் எனும் பெருமையையும் டெண்டுல்கர் பெற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--