Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 நவம்பர் 08 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் 115 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. முதல்தரப் போட்டியொன்றில் அவர் பெற்ற முதலாவது சதம் இதுவாகும்.
அஹமதாபாத் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 487 ஒட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 459 ஓட்டங்களையும் பெற்றன.
இப்போட்டியின் நான்காவது நாளான நேற்றைய ஆட்டமுடிவின்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
நேற்று 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்த ஹர்பஜன் சிங், ஐந்தாவது நாளான இன்று தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
193 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 11 பௌண்டரிகள் உட்பட 115 ஓட்டங்களை அவர் குவித்தார். இரண்டாவது இன்னிஸில் இந்திய அணியின் சார்பில் ஆகக்கூடுதலான ஓட்டங்களை ஹர்பஜன்சிங்தான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வி.வி.எஸ். லக்ஷ்மன் 91 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய அணி 256 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
வெற்றி பெறுவதற்கு 295 ஓட்டங்கள் தேவையான நிலையில் இந்திய அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. எனினும் அவ்வணி 22 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இப்போட்டியை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு இரு அணிகளின் தலைவர்களும் இணங்கினர்.
இப்போட்டியின் சிறந்த வீரராக ஹர்பஜன்சிங் தெரிவானார். இத்தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025