Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 08 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று காலை காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ஸுல்கர்னைன் ஹைதர் சற்றுமுன் லண்டனை சென்றடைந்துள்ளார்.
24 வயதான ஸுல்கர்னைன் ஹைதர், துபாயில் தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் சுற்றுப்போட்டியில் பங்குபற்றி வந்தார்.
இன்றைய 5 ஆவதும் இறுதியுமான போட்டிக்காக பாகிஸ்தான் அணி மைதானத்திற்குப் புறப்பட்டபோது ஹைதர் அணியில் இணைந்துகொள்ளவில்லை. ஹைதரின் ஹோட்டல் அறையிலும் அவர் காணப்படவில்லை. அதையடுத்து அவர் காணாமல் போனதாக கூறப்பட்டது.
இது குறித்து அணியின் முகாமையாளர் இந்திகாப் ஆலமிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 'நான் இது குறித்து அதிகம் பேசமுடியாது. நான் சொல்ல முடிந்தது என்னவென்றால் அவர் இன்று காலை மைதானத்திற்கு வரவில்லை. நாம் அவரை தேடி வருகிறோம்' என்றார்.
எனினும் சில மணித்தியாலங்களின் பின்னர் ஹைதர் லண்டன் நோக்கி விமானத்தில் சென்றுகொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சற்றுமுன் அவர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, துபாயில் சிம்கார்ட் ஒன்றை வாங்குவதற்காக கடவுச்சீட்டு தேவைப்படுவதாகக் கூறி, அணி நிர்வாகத்திடமிருந்து அவர் கடவுச்சீட்டை பெற்றுச்சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றி ஓட்டத்தை ஹைதர் தான் அடித்தார். அதையடுத்து தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தான் பாகிஸ்தான் அணியைவிட்டு விலகிச்செல்வதாக பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவருக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அவரின் பேஸ் புக் இணையத்தள பக்கத்திலும் இத்தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
அதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அணி நிர்வாகத்தின் அனுமதியை மீறி வெளியில் சென்றமைக்காக ஹைதருக்கும் பாகிஸ்தான் அணியின் மேலும் இரு வீரர்களான ஷஹைப் ஹசன், அப்துர் ரஹ்மான் ஆகியோருக்கும் தலா 12000 பாகிஸ்தானிய ரூபா அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஹைதர் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அத்துடன் ஐ.சி.சி.யின் ஊழல் ஒழிப்புப் பிரிவும் ஹைதருடன் தொடர்புகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹைதர் இதுவரை 4 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளார்.
இதேவேளை தற்போது துபாயில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தென்னாபிரிக்காவுடனான ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளராக உமர் அக்மல் நியமிக்கப்பட்டுள்ளார்.
10 minute ago
17 minute ago
21 minute ago
1 hours ago
Thilak Tuesday, 09 November 2010 03:11 AM
அண்மையில்தான், ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டு எல்லாம் சற்று அடங்கி, பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றிகளையும் ஈட்ட ஆரம்பித்தது. அதற்குள் இப்படியொரு சிக்கலா?
Reply : 0 0
rose Tuesday, 09 November 2010 10:27 PM
இச் சிக்கல் தொடரும் என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
21 minute ago
1 hours ago