2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

முதல் டெஸ்ட்டில் முச்சதம் குவித்தார் கைல்

Super User   / 2010 நவம்பர் 16 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  மேற்கிந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கைல் முச்சததத்தைக் கடந்துள்ளார்.

காலியில் நடைபெறும் இப்போட்டியில் நேற்று 219 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த கிறிஸ் கைல் போட்டியின் இரண்டாவது நாளான இன்று தனது இரண்டாவது டெஸ்ட் முச்சதத்தைப் பூர்த்தி செய்தார்.

31 வயதான கிறிஸ் கைல்,  2005 ஆம் ஆண்டில்தென்னாபிரிக்க அணிக்கெதிராக 317 ஓட்டங்களைப் பெற்றமையே டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.

அந்த எண்ணிக்கையை கடக்க விரும்புவதாக அவர் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சற்றுமுன் 319 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் டெஸ்ட் இன்னிங்ஸில் தனது சிறந்த பெறுதியை அவர் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை 20 வீரர்கள் மொத்தமாக 24 தடவை டெஸ்ட் இன்னிங்ஸ்களில் முச்சதம் குவித்துள்ளனர். டொனால்ட் பிரட்மன், பிரையன் லாரா, கிறிஸ் கைல், வீரேந்தர் ஷேவாக் நான்கு வீரர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை முச்சதம் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2004 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்திய வீரர் பிரையன் லாரா 400 ஓட்டங்களைக் குவித்தமை டெஸ்ட் இன்னிங்ஸில் வீரரொருவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக விளங்குகிறது.

இப்போட்டியில் சற்றுமுன்னர் வரை மேற்கிந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 539 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .