Super User / 2010 நவம்பர் 18 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஃபொலொ ஒன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
காலியில் நடைபெறும் இப்போட்டியில் மேற்கிந்திய அணி முதல் இன்னிங்கஸில் 580 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி மூன்றாவது நாள் முடிவில் 3விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இன்று பிற்பகல் அவ்வணி 378 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
குமார் சங்கக்கார 73, மஹேல ஜயவர்தன 59, திலான் சமரவீர 52, பிரசன்ன ஜயவர்தன 58 ஆகிய நான்கு வீரர்கள் அரைச்சதம் குவித்தனர்.
பின்வரிசை வீரர் தம்மிக பிரசாத் 46 பந்துவீச்சுகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 47 ஓட்டங்களைப் பெற்றார்.
மேற்கிந்திய பந்துவீச்சாளர்களில் ஷேன்; ஷில்லிங்போர்ட் 123 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கெமரூச் 75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
381 ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இலங்கை அணி ஃபொலோ ஒன் நிலையைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அந்த இலங்கை 3 ஓட்டங்களால் இலங்கை அணி தவறிவிட்டதால் இன்று பிற்பகல் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்க நேரிட்டது.
இன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 89 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. குமார் சங்கக்கார, திலகரட்ன தில்ஷான் இருவரும் தலா 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
தற்போது மேற்கிந்திய அணி 113 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. நாளை போட்டியின் கடைசி நாளாகும்.

5 minute ago
11 minute ago
15 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
15 minute ago
27 minute ago