Super User / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
சென்சூரியனில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 136 ஓட்டங்களையும் தென்னாபிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 620 ஓட்டங்களையும் பெற்றன.
நான்காவது நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 454 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்கு அவ்வணிக்கு மேலும் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இன்று திங்கட்கிழமை காலை எஞ்சியிருந்த இரு விக்கெட்டுகளையும் 5 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து தென்னாபிரிக்கா அணி வீழ்த்தியது. சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களைப் பெற்றார்.
தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களில் டேல் ஸ்டெய்ன் 104 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழத்தினார். இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தென்னாபிரிக்க வீரர் ஜக்கலிஸ் தெரிவானார்.
3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி டர்பன் நகரில் ஆரம்பமாகவுள்ளது.
.jpg)
14 minute ago
33 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
55 minute ago