2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

பாக். அணியிலிருந்து மொஹமட் யூஸுப் நீக்கம்

Super User   / 2011 ஜனவரி 18 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் மொஹமட் யூஸுப் சேர்க்கப்படவில்லை.

இச்சுற்றுப்போட்டிக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி விபரம்இன்று அறிவிக்கப்பட்டது. இப்பட்டியிலில் யூஸுப் இடம்பெறவில்லை. அதேவேளை அணித்தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பும் தாமதமாகியுள்ளது.

மொஹமட் யூஸுப் கடந்த உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளிலும் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 281 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட அவர், கடந்த வருடம் தான் விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் ஒரேயொரு அரைச்சதம் மாத்திரமே பெற்றிருந்தார்.

2007 ஆம் ஆண்டு உலக கிண்ண சுற்றுப்போட்டியில் விளையாடிய வீரர்களில் 7 பேர் மாத்திரமே இம்முறையும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இச்சுற்றுப்போட்டி நடைபெறும் இந்திய உப கண்டத்து நாடுகளின் ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானவை.

எனினும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் இரு விசேட சுழற்பந்துவீச்சாளர்கள் மாத்திரமே அப்துர் ரஹ்மான் சயீட் அஜ்மல் - சேர்க்கப்பட்டுள்ளனர். சொஹைப் அக்தார் உட்பட நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

 வீரர்கள் விபரம்: சஹீட் அவ்ரிடி, மொஹமட் ஹாபீஸ், அஹ்மட் ஷேஹாட், கம்ரன் அக்மல், யூனிஸ் கான், மிஸ்ப உல் ஹக், ஆஷாட் சபீக், உமர் அக்மல், அப்துல் ரஸாக், அப்துர் ரெஹ்மான், சீட் அஜ்மல், சொஹைப் அக்தார்இ உமர் குல், வஹாப் ரியாஸ், சொஹைல் தன்வீர்.


  Comments - 0

  • yarro oruvan Wednesday, 19 January 2011 04:22 AM

    ஓகே,நல்ல ஒரு selection .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X