2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

உலக கிண்ணத்திற்கு அரங்குகள் தயார்: இலங்கை கிரிக்கெட் சபை

Super User   / 2011 ஜனவரி 22 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண சுற்றுப்போட்டிக்கு இலங்கையிலுள்ள அரங்குகள் தயாராகிவிட்டதாகக் கூறும் இலங்கைக் கிரிக்கெட் சபையின் தலைவர் டி எஸ்.டி சில்வா,  சில பத்திரிகைகள் பிழையான செய்திகளை வெளியிட்டு வருவதாக கூறியுள்ளார்.

பி.பி.சி. சிங்கள சேவையிடம் இது தொடர்பாக பேசிய அவர், மேற்படி பத்திரிகைகள் கூறுவதை 'சீரியஸாக' கருத்திற் கொள்கிறீர்களா?  அப்பத்திரிகைகள் என்றாவது நல்லதாக எதையும் கூறியுள்ளனவா? அவர்கள் தவறான செய்திகளை வெளியி;ட்டால் நான் என்ன செய்ய முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான 15 அரங்குகளில் 5 அரங்குகளின் நிர்மாணிப் பணிகள் உரிய இலக்கை அடையத் தவறியுள்ளதாக ஐ.சி.யின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹாருன் லோகார்ட் அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எவரும் மைதானங்களுக்குச் செல்வதை நாம் தடுக்கவில்லை.  அவர்கள் அங்கு சென்று பார்த்துவிட்டு தமது செய்திகளை எழுதலாம் என டி.எஸ்.டி. சில்வா தெரிவித்துள்ளார்.

"உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான ஆர்.பிரேமதாஸ அரங்கு, பள்ளேகல அரங்கு ஆகியன 99 சதவீதம் பூர்த்தியடைந்துவிட்டன. அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ அரங்கு விரைவில் தயாராகிவிடும்" என நம்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.

அண்மையில் மேற்படி அரங்குகளுக்கு விஜயம் செய்த ஐ.சி.சி ஆடுகள நிபுணர் அன்டி அட்கின்ஸன் உட்பட ஐ.சி.சி. அதிகாரிகள் அரங்குகள் குறித்து திருப்தி தெரிவித்ததாகவும் டி.எஸ்.டி. சில்வா கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .