Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 பெப்ரவரி 17 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப வைபவம் பங்களாதேஷ் பங்கபந்து அரங்கில் சற்றுமுன்னர் கோலாகலமாக ஆரம்பமாகியது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா பிரதம அதிதியாக கலந்துகொண்டார். கலை நிகழ்ச்சிகளில் சுமார் 3500 பேர் பங்குபற்றுகின்றனர்.
ஆரம்ப விழாவுக்கு பங்குபற்றிய 14 அணிகளின் தலைவர்களும் சைக்கிள் ரிக்ஷாக்களில் மைதானத்தை வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நாளை மறுதினம் முதல் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 ஆவது தடவையாக இச்சுற்றுப்போட்டி நடைபெறுகிறது. பங்களாதேஷில் உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.
14 அணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றுகின்றன. முதலாவது போட்டி எதிர்வரும் சனிக்கிழமை பங்களாதேஷில் நடைபெறவுள்ளது. பங்ளாதேஷ் - இந்திய அணிகள் இப்போட்டியில் மோதவுள்ளன.
இப்போட்டிகளில் வழங்கப்படவுள்ள மொத்தப் பரிசுத் தொகை ஒரு கோடி அமெரிக்க டொலர்களாகும். சம்பியனாகும் அணிக்கு ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கிண்ணத்துடன் 30 லட்சம் டொலர்கள் வழங்கப்படும். இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 15 லட்சம் டொலர்கள் வழங்கப்படும். 1 முதல் 8 வரையான இடங்களைப் பெறும் அணிகளுக்கு பரிசுத் தொகையாக மொத்தமாக 74.8 லட்சம் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
3 hours ago
5 hours ago
Thilak Friday, 18 February 2011 12:43 AM
இலங்கை அணி சம்பியனாகுவதற்கு வாழ்த்துக்கள்
Reply : 0 0
rismi Friday, 18 February 2011 12:58 AM
all the best srilanka
Reply : 0 0
Al Farzan Friday, 18 February 2011 05:01 PM
இலங்கை அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்
Reply : 0 0
a.m.hilmi Saturday, 19 February 2011 03:47 AM
சகல போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago