2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ஜாவிட் மியண்டட்டின் சாதனையை சமப்படுத்தினார் சச்சின்

Super User   / 2011 பெப்ரவரி 19 , பி.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவிட் மியண்டட் படைத்திருந்த சாதனையொன்றை இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் நேற்று சமப்படுத்தினார்.

தொடர்ச்சியாக 6 உலகக்கிண்ண சுற்றுப்போட்டிகளில் ஜாவிட் மியண்டட் விளையாடிய சாதனை படைத்த சாதனையையே டெண்டுல்கர் சமப்படுத்தியுள்ளார்.

1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர் 1992 ஆம் ஆண்டு தனது முதல் உலகக் கி;ண்ணப் போட்டியில் விளையாடினார். அது ஜாவிட் மியண்டட்டின் 5 ஆவது உலகக்கிண்ணத் தொடராகும்;. அத்தொடரில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

அதன்பின் 1996, 1999, 2003, 2007, ஆகிய வருடங்களில் நடந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடிய டெண்டுல்கர் 2011 ஆம் ஆண்டு தனது 6 ஆவது உலகக்கி;ண்ணத் தொடரில் விளையாடுகிறார். நேற்று நடந்த போட்டி டெண்டுல்கரின் 445 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியாகும்.

ஜாவிட் மியண்டட் 1975 ஆம் ஆண்டு தனது 18 ஆவது பிறந்த தினத்திற்கு மறுநாள் உலகக் கிண்ண போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார்.  1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கெதிரான கால் இறுதிப்போட்டியில் இறுதியாக அவர் விளையாடினார். அது மியண்டட்டின் 233 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியாகும்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .